பழஞ்சோறு... (கல்முனையான்)

Tuesday, November 17, 2009

நேத்து பொரிச்ச சூடை மீனை சோத்துக்குள் புதைத்து
ஏக்கத்துடன் அண்ணார்ந்தேன் எங்க வீட்டுக் கூரையினை
வாலறுந்த பல்லி ஒன்று சண்டை போடுகிறது
தன் உணவினைத் தட்டிப்பறிக்க மற்றைய பல்லியிடம்...

பல்லியிலுமா!!! இந்தப் பாகப்பிரிவினை
பக்கத்து வீட்டு கோழியிறைச்சியின் தாழிப்பு வாசம்
என்தன் நாக்கின் நடுவிலே நயாகரா நீர்வீழ்ச்சியின்
போட்டோ கொப்பியை ஒட்டியது...

வாசத்தை மட்டும் சுவாசிக்கும் நாங்கள்
வேசத்தையிட்டு வாழ்கிறோம் மனிதர்கள் என்று
கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன் என்னை ஆவலுடன்
வெறும் ஏமாற்றத்தின் விளைநிலமாய் நான்

சுடு சோத்தின் சூட்டினிலே குளிர்காயும் ஏழைகள்
இடியப்பம் சம்பலும் அவர்களுக்கு சொர்க்கத்து உண்டிகள்
பழஞ்சோறாய் நாங்கள் வீதியிலே கொட்டிவிடப்பட
பணக்கார நாய்களெல்லாம் படையெடுத்து வருகின்றன.

5 comments:

Anonymous said...

nice one ..

Theepan Periyathamby said...
This comment has been removed by the author.
Theepan Periyathamby said...

மிக நன்றாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி

Saboor Adem said...

அழகான கவிதை,
கருத்துக்கள் அற்புதம்
தாஸிம் சுடு சோத்துடன் வெங்காயம் + மாசிச் சம்பலும் சேர்த்து சாப்பிடும் ருசி, எந்த ஸ்டார் ஹோட்டலிலும் இல்லை என்பதுதான் உன்மை.

தொடருங்கள்..
சபூர் ஆதம்
அக்கரைப்பற்று

Thazeem said...

Thanks Saboor Adam