
காமத்தின் ருசி அறியா காரிகையை
கல்யாணம் என்று சொல்லி அவசரமாய் மணமுடித்து
அஞ்சாறு நாளிலேயே அமெரிக்கா
போய்விட்டான் ஆறாத வடுவுடனே
அவனுக்கும் அவளுக்கும் இப்போது
தொலை பேசியில்தான் தாம்பத்யம்
காலை எழுந்தவுடன் உள் வீட்டு கூரை பார்த்து
ஏக்கத்துடன் பெரு மூச்சில் இவள்.
சாப்பிட மனமில்லை எதற்கு சமைக்க
அவள் உள் மனம் பேசுகிறது
சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டான் ஆசாமி
ரெண்டு வருஷம் காத்திருக்கணுமே...
வெளியிலே சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள் இம் மாது
இவளின் உணர்வுகளை எங்கோ சாக்குப்பையினுள்
ஒளித்துவிட்டு ஒட்டடை அடிக்கிறாள் வீட்டுக்கு..
பாவம் அவள் பரிதாபம் அவள் உணர்வுகள்
சந்தோசம்,அன்பு,பாசம் எல்லாமே
வெறும் நான்கு சுவருக்குள்ளே
நர்த்தனம் ஆடுகிறது நிர்வானத்துடன்...
1 comments:
தங்கள் கவிதைகளில் அதிகமானவை காதல் மற்றும் பெண் என்பவற்றை கருவாகக் கொண்டே சுழல்கின்றன. பெண்ணியம் போன்ற வேறு கருக்களிலும் எழுத முயற்சியுங்கள். உங்கள் எழுத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள்.
mimramzy@gmail.com
Post a Comment